Tuesday, August 14, 2012

மின்சாரத்திற்கு பேச வாய் இருந்தால்...


வணக்கம். நான் தான் மின்சாரம் பேசுகிறேன். உங்களிடம் ஒரு விஷயத்தை பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன். இப்பொழுது அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறதே என்னவென்று யோசித்துப் பார்த்தீர்களா? இதோ நான் சொல்கிறேன். உங்களுடைய வாழ்க்கையில் நான் ஒரு மிக முக்கியமானதாக ஒன்றாகி விட்டேன். நான் இல்லையென்றால் (இந்த காலத்தில்) இந்த பிரபஞ்சமே செயலிழந்து விடும் என்று எண்ணுகிறேன்.
உங்களில் எத்தனைப் பேர் என்னை சரியான முறையில்

பூமியில் நகரும் சூரியன்கள்...


பொதுமக்கள் குறிப்பிட்ட தூரத்திற்கு பயணம் செய்ய எவ்வளவோ வசதிகள் இருக்கின்றன. அதாவது பேருந்துகள், மிதிவண்டி, இருசக்கர வாகனங்கள், ஆட்டோ, சேர் ஆட்டோ இவைகளை உபயோகபடுத்திக் கொள்கின்றனர். குறிப்பாக இன்று சாலை வீதிகளில் சேர் ஆட்டோக்களின் ராஜ்ஜியம் தான் அதிகமாக இருக்கிறது. சிறு மற்றும் நடுத்தர வர்கத்தினரின்

வாகனங்கள் நிறுத்து(தக் கூடாது)மிடம்.


நாம் ஏதோ ஒரு காரணத்திற்காக வீட்டிலிருந்து வெளியே செல்லும் போது ஏதாவது ஒரு வாகனத்தை எடுத்துச் செல்கிறோம். சாலையில் சென்று கொண்டிருக்கும் போது வழியில் ஏதாவது ஒரு பொருட்கள் வாங்குவதற்கோ அல்லது நமக்கு ஒதுக்கப்பட்ட வேலைகளை செய்து முடிப்பதற்கோ வாகனத்தை நிறுத்தி அவைகளை செய்து முடிக்கின்றோம். பொருட்களை வாங்குவதற்கு அல்லது ஒதுக்கப்பட்ட வேலைகளை

மதிக்கப்படாத எல்லைக்கோடுகள்...


சாலை வீதிகளில் இன்று வாகனங்களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே வருகிறது. வாகன ஓட்டுனர்கள் சாலை விதிமுறைகளை கண்டும் காணாமல் சென்றடையும் இடத்தை மட்டும் நினைவில் வைத்து அதை நோக்கிச் செல்கின்றனர். இடையூறும், நெரிசலும், விபத்தும் ஏற்படாமல் தடுக்க கடைப்பிடிக்க வேண்டிய சாலை விதிமுறைகளை அரசு ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறது. இவற்றில் ஒன்றுதான் எல்லைக்கோடு. சாலையில் செல்லும் மற்றும் நிறுத்தும் வாகனங்களுக்கு அதனுடைய எல்லைக்கோட்டின் கட்டுப்பாட்டில் வரவேண்டும் என்பதுதான் பொருள். யாரோ வண்ணச்சாயங்களை(Paint) சாலையில்

Sunday, August 12, 2012

வாக்களர் அடையாள அட்டை


அரசாங்க(ஊழியர்களின்)த்தின் கவனக்குறைவு...

எனக்கு 18 வயது நிரம்பியவுடன் வாக்காளர் பதிவுச்சீட்டில் எனது பெயர் மற்றும் முழுவிவரங்களை இல்லம் தேடி வந்த அரசாங்க ஊழியர்களிடம் கொடுத்தேன். பிறகு வாக்காளர் அடையாள அட்டைக்காக புகைப்படங்களையும் மற்றும் விவரங்களையும் கொடுத்தேன். சிறிது காலம் சென்ற பிறகு தேர்தல் வந்தது. அந்த தேர்தலில் வாக்குப்பதிவு செய்வதற்காக வாக்குச்சீட்டு வந்தது. ஆனால்