வணக்கம். நான் தான் மின்சாரம் பேசுகிறேன். உங்களிடம் ஒரு விஷயத்தை பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன். இப்பொழுது அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறதே என்னவென்று யோசித்துப் பார்த்தீர்களா? இதோ நான் சொல்கிறேன். உங்களுடைய வாழ்க்கையில் நான் ஒரு மிக முக்கியமானதாக ஒன்றாகி விட்டேன். நான் இல்லையென்றால் (இந்த காலத்தில்) இந்த பிரபஞ்சமே செயலிழந்து விடும் என்று எண்ணுகிறேன்.
உங்களில் எத்தனைப்
பேர் என்னை சரியான முறையில்
உபயோக்கிக்கிறார்கள் என்று கணக்குப் பார்த்தால் மிகவும் குறைவாகத் தான் இருக்கிறது. அதாவது தேவையான நேரத்தில் மற்றும் தேவையான இடத்தில் உபயோகித்தால் இன்று உங்களுக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது. உதாரணமாக உங்களது வீட்டிலோ அல்லது நீங்கள் வேலைப் பார்க்கும் இடத்திலோ என்னை வைத்து இயங்கும் இயந்திரங்களை (Fan, TV, Computer, Lamp and etc.,) தேவை இல்லாத நேரத்தில் மற்றும் தேவை இல்லாத இடத்தில் இயங்கிக் கொண்டிருந்தால் அதனை நிறுத்தி வைக்க (switch off) வேண்டும். ஆனால் நீங்கள் அதை கண்டும் காணாமல் நமக்கென்ன என்று செல்கிறீர்கள். இப்படி ஒவ்வொரு வரும் செய்த தவறால் தான் தேவையான அளவு என்னை உபயோகிக்க முடியாமல் போகிறது. அதனால் தான் இன்று கஷ்டங்களை அனுபவிக்கிறீர்கள். இது தேவைதானா உங்களுக்கு?. சற்று யோசித்துப் பாருங்கள் குறைந்த பட்சம் ஏழு வருடமாக என்னை உற்பத்தி செய்வதற்கு தேவையான அளவு பொருட்கள் கிடைக்காமல் (நிலக்கரி, காற்று, மழை) கஷ்டப் பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். ஆரம்பத்தில் 22 மற்றும் 21 மணி நேரம் தான் உபயோகிக்கும் அளவாக இருந்தேன். தற்பொழுது 12 மற்றும் 10 (இதற்கும் குறைவாக)மணி நேரம் தான் உபயோகிக்கும் அளவாக இருந்து கொண்டிருக்கின்றேன். இந்த அளவை இன்னும் குறையாமல் இருக்க உங்கள் கையில் தான் இருக்கிறது. உங்களுக்கு சேவை செய்வதுதான் என்னுடைய கடமை. ஆனால் நீங்கள் செய்த தவறால் என்னால் முடியவில்லை. நீங்கள் படும் கஷ்டங்களைப் பார்த்தால் எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. இது உங்களுக்கு ஒரு சோதனையாக இருக்கட்டும். உங்களுக்காக ஒரு வாய்ப்பு கொடுக்கின்றேன். ஒரு நொடி கூட குறையாமல் முழுமையான அளவாக கிடைக்க வேண்டுமென்றால் என்னை சரியான முறையில் உபயோகிக்க வேண்டும். மீண்டும் நீங்கள் தவறு செய்தால் அதன் விளைவு மிகவும் பயங்கரமாக இருக்கும். உங்களில் யார் 24 மணி நேரம் உழைக்கிறார்கள். வேலை முடிந்துவிட்டால் ஓய்வு எடுத்துக் கொள்கிறீர்கள். என்னை மட்டும் ஏன் இப்படி செய்கிறீர்கள். உங்களுக்கு தேவையான நேரத்தில் மற்றும் தேவையான இடத்தில் உபயோகித்து தேவையில்லாத நேரத்தில் மற்றும் இடத்தில் எனக்கும் ஓய்வு கொடுங்கள். இனிமேலாவது திருந்தப் பாருங்கள். திருந்துவீர்கள் என நம்புகிறேன்.
இப்படிக்கு,
மின்சாரம்

No comments:
Post a Comment