நாம் ஏதோ ஒரு காரணத்திற்காக வீட்டிலிருந்து வெளியே செல்லும் போது ஏதாவது ஒரு வாகனத்தை எடுத்துச் செல்கிறோம். சாலையில் சென்று கொண்டிருக்கும் போது வழியில் ஏதாவது ஒரு பொருட்கள் வாங்குவதற்கோ அல்லது நமக்கு ஒதுக்கப்பட்ட வேலைகளை செய்து முடிப்பதற்கோ வாகனத்தை நிறுத்தி அவைகளை செய்து முடிக்கின்றோம். பொருட்களை வாங்குவதற்கு அல்லது ஒதுக்கப்பட்ட வேலைகளை
செய்து முடிப்பதற்கு முன் இந்த வாகனத்தை நிறுத்துவதற்கு நாம் சாலையோரங்களில் இடத்தை தேடுகின்றோம். அதாவது மிதிவண்டியோ, இருசக்கர வாகனங்களோ மற்றும் இதர வாகனங்களோ சாலையோரங்களில் ஒதுக்கப்பட்ட இடத்தில் தான் நிறுத்த வேண்டும். ஆனால் வாகன ஓட்டுனர்கள் என்ன செய்கின்றார்கள் தெரியுமா? சாலையோரங்களில் ஒதுக்கப்பட்ட இடத்தில் தான் நிறுத்துகிறார்கள். ஒழுங்கு முறையாக நிறுத்தாமல் (மிதிவண்டி, இருசக்கர வாகனங்கள் மற்றும் பல...) குறுக்கும் நெடுக்குமாக நிறுத்துகிறார்கள். அதாவது புரியும் படியாக சொன்னால் 90° அல்லது அந்த இடத்திற்கு தகுந்தாற் போல் நிறுத்துவதை விட்டு 170°, 150°, 30°, 20° மற்றும் ஏதாவது ஒரு கோணத்தில் நிறுத்திவிட்டு செல்கிறார்கள். மூன்று வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் ஒருவருடைய வாகனத்தை நிறுத்தினால் அடுத்தடுத்து வரும் வாகனங்களுக்கு இடம் இல்லாமல் மற்றொரு வரிசையை உருவாக்கி நிறுத்திவிட்டு செல்கிறார்கள். இதனால் சாலையின் ஓரத்தில் நடந்து செல்லும் பொதுமக்களுக்கும், போக்குவரத்து வாகனங்களுக்கும் நெரிசலையும், இடையூறையும் ஏற்படுத்துகின்றனர். இன்னும் சில நபர்கள் என்ன செய்கின்றார்கள் தெரியுமா? வாகனங்கள் நிறுத்தக்கூடாது என்று அறிவிப்புப்பலகை அங்கே வைக்கப்பட்டிருக்கும். அதை கவனித்தும் தங்களுடைய வாகனத்தை நிறுத்துகிறார்கள். இவர்களை என்ன செய்வது? இப்படிச் செய்தாலும் பொதுமக்களுக்கும், போக்குவரத்து வாகனங்களுக்கும் நெரிசலும், இடையூறும் ஏற்படக்கூடும். இவற்றைகளை சரிசெய்வதற்கு காவல்துறை அதிகாரிகள் வந்து (ஒழுங்கு முறையாக நிறுத்தப்படாத) இந்த வாகனங்கள் யாருடையது என்று அங்கே உள்ள பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டிருப்பார். இதை கவனிப்பதற்கும், கண்டிப்பதற்கும் (இதற்கெல்லாம்)காவல்துறை அதிகாரிகள் வந்தால் நமக்குத்தான் அசிங்கமாகவும், கேவலமாகவும் இருக்கிறது. இந்த சிறு விஷயத்திலும் கூட சமூக சேவைகளில் அக்கறை இல்லாதவர்களாகி விடுகிறோம். நான் பார்த்தவரையில் படிக்காதவர்களை விட படித்தவர்களும் இத்தகைய செயல்களை செய்கிறார்கள். படிக்காதவர்களுக்கு படிப்பறிவு குறைவாக இருக்கும் என்று வைத்துக் கொள்ளலாம். ஆனால் படித்தவர்கள் இவற்றைச் செய்தால் நாம் படித்த படிப்பிற்கு என்ன மதிப்பு இருக்கிறது. சாலையில் ஒதுக்கப்பட்ட இடத்தில் வாகனத்தை ஒழுங்கு முறையாக நிறுத்தாமல் சென்றால் அங்கே ஏற்படும் நெரிசல்களுக்கும், இடையூறுகளுக்கும் யார் காரணம் என்று நீங்களே யோசித்துப் பாருங்கள்.

No comments:
Post a Comment