பொதுமக்கள் குறிப்பிட்ட தூரத்திற்கு பயணம் செய்ய எவ்வளவோ வசதிகள் இருக்கின்றன. அதாவது பேருந்துகள், மிதிவண்டி, இருசக்கர வாகனங்கள், ஆட்டோ, சேர் ஆட்டோ இவைகளை உபயோகபடுத்திக் கொள்கின்றனர். குறிப்பாக இன்று சாலை வீதிகளில் சேர் ஆட்டோக்களின் ராஜ்ஜியம் தான் அதிகமாக இருக்கிறது. சிறு மற்றும் நடுத்தர வர்கத்தினரின்
பிழைப்புக்காக ஷேர் ஆட்டோவை அரசு அறிமுகப்படுத்தி வைத்தது. ஆனால்
அதை தவறான
முறையில் உபயோகப்படுத்திக் கொண்டிருக்கின்றனர் பயணாளிகள் மற்றும்
ஓட்டுனர்கள். அவசரத் தேவைக்கு அரசுப் பேருந்து மற்றும் தனியார்
சிற்றுந்துக்காக காத்திருக்காமல் ஷேர் ஆட்டோவில் பயணிக்கின்றோம்.
ஒதுக்கப்பட்ட இடத்தில் தான் ஏற மற்றும் இறங்க வேண்டும். ஆனால் சாலை
விதிமுறைகளை கடைப்பிடிக்காமல் நமக்குத் தேவையான இடத்தில் நிறுத்தி ஏறவும்
மற்றும் இறங்கவும் செய்கிறோம். இதனால் பின்வரும் வாகனங்களுக்கோ மற்றும்
பொதுமக்களுக்கோ விபத்துக்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றோம். ஷேர் ஆட்டோ
ஓட்டுனர்கள் தனது சுய லாபத்திற்காக அளவுக்கு அதிகமாக பயணாளிகளை
ஏற்றிக்கொள்வதும், சாலை வீதிகளில் ஒருவருக்கொருவர் முந்திக்கொண்டு
விபத்துக்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றனர். இந்த வாகனங்களின் மூலம்
ஏற்படும் விபத்துக்களை தினசரி கேள்விப்பட்டும் பார்த்துக்
கொண்டிருக்கின்றோம். ஆகாயத்திலிருந்து பூமியைப் பார்த்தால் ஏதோ மஞ்சள்
நிறத்தில் நகரும் துணை சூரியன்கள் இருப்பதுப் போல் தெரியும். அளவுக்கு
அதிகமாக ஆகிவிட்டது ஷேர் ஆட்டோக்களின் எண்ணிக்கை. இந்த வாகனங்கள் அவசர
காலத்திற்கு நல்லதும் அதே சமயத்தில் விளைவுகளும் ஏற்படுத்துகின்றனர்.
பயணாளிகள் மீதோ, ஓட்டுனர்கள் மீதோ குறை சொல்லவில்லை. ஆனால் இருவர்களில்
யாரோ தவறு செய்கிறார்கள். அதை புரிந்துக் கொண்டு திருந்தினால்
விபத்துக்களை தடுக்கலாம். ஓட்டுனர்கள் சாலை வீதிகளின் விதிமுறைகளை
கடைபிடித்து, பயணாளிகளை ஏற்றிக்கொண்டு மற்ற வாகனங்களுக்கும் மற்றும்
பொதுமக்களுக்கும் இடையூறு இல்லாமல் கவனமுடன் செல்ல வேண்டும். பயணாளிகள்
விதிமுறையை கடைப்பிடித்தால் வாகன ஓட்டுனர்கள் உங்கள் வழிக்கு வருவார்கள்.
வழியில் விழி வையுங்கள்...
வழியில் விழி வையுங்கள்...

No comments:
Post a Comment