Tuesday, August 14, 2012

மதிக்கப்படாத எல்லைக்கோடுகள்...


சாலை வீதிகளில் இன்று வாகனங்களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே வருகிறது. வாகன ஓட்டுனர்கள் சாலை விதிமுறைகளை கண்டும் காணாமல் சென்றடையும் இடத்தை மட்டும் நினைவில் வைத்து அதை நோக்கிச் செல்கின்றனர். இடையூறும், நெரிசலும், விபத்தும் ஏற்படாமல் தடுக்க கடைப்பிடிக்க வேண்டிய சாலை விதிமுறைகளை அரசு ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறது. இவற்றில் ஒன்றுதான் எல்லைக்கோடு. சாலையில் செல்லும் மற்றும் நிறுத்தும் வாகனங்களுக்கு அதனுடைய எல்லைக்கோட்டின் கட்டுப்பாட்டில் வரவேண்டும் என்பதுதான் பொருள். யாரோ வண்ணச்சாயங்களை(Paint) சாலையில்
கொட்டிவிட்டுச் சென்றுவிட்டாரோ என்று ஒவ்வொருவரும் நினைக்கின்றார்களோ, என்னவோ! எல்லைக்கோட்டை ஒருவரும் (விதிமுறைகளை)மதிப்பதில்லை மீறுகிறார்கள். நான் என்ன சொல்ல வருகின்றேன் என்று உங்களுக்கு புரிகிறதா? அதாவது சாலை வீதிகளின் ஓரத்திலும், மையத்திலும் மற்றும் சாலைகள் சந்திக்கும் இடத்திலும் மற்றும் ஆங்காங்கே எல்லைக்கோடுகள் அமைக்கப்பட்டிருக்கும். இவற்றை கண்டுக்கொள்ளாமல் பொது இடங்களில் இடையூறும், நெரிசலும், விபத்தும் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றோம். வலதுபுறம் செல்லும் வாகனங்கள் வலதுபுறமும், இடதுபுறம் செல்லும் வாகனங்கள் இடதுபுறமும் இயக்க வேண்டும். இவர்கள் இதை கையாள்வதில்லை. இடதுபுறம் செல்ல வேண்டிய வாகனத்தை வலதுப் பகுதியில் (முந்திக்கொண்டு)இயக்குவது, வலதுபுறம் செல்ல வேண்டிய வாகனத்தை இடதுப் பகுதியில் (முந்திக்கொண்டு)இயக்குவது, இந்த மாதிரியான செயல்களைச் செய்தால் அங்கே ஏற்படும் இடையூறுகளுக்கும், நெரிசல்களுக்கும், விபத்துகளுக்கும் வாகன ஓட்டுனர்களாகிய நீங்கள்தான் காரணம். இந்தப் பிரச்சனைகளை தடுப்பதற்குத்தான் சாலையின் நடுவில் எல்லைக்கோடுகள் அமைக்கப்பட்டிருக்கிறது. சாலைகள் சந்திக்கும் இடங்களின்(Signal) மேற்புறம் சிவப்பு விளக்கு(நிறுத்துக), மஞ்சள் விளக்கு(தயார் நிலையில் இருக்க), பச்சை விளக்கு(புறப்படுக) மற்றும் இந்த விளக்குகளின் சில அடிகளுக்கு முன்னே பொதுமக்கள் சாலைகளை கடந்துச் செல்ல எல்லைக்கோடும், இவற்றுக்கு சில அடி முன்னே வாகனங்கள் நிறுத்துவதற்கு எல்லைக்கோடுகள் அமைக்கப் பட்டிருக்கும். ஆனால் நாம் என்ன செய்கிறோம், எல்லைக்கோட்டிற்கும், விளக்குகளுக்கும் அப்பால் வாகனத்தை நிறுத்திக் கொண்டு மற்றொரு சாலையிலிருந்து வரும் வாகனங்களுக்கும், சாலையை கடக்க முடியாமல் நிற்கும் பொதுமக்களுக்கும், சிவப்பு விளக்கு எரிந்து கொண்டிருக்கும் வேளையில் வாகனத்தை இயக்குவதும், எல்லைக்கோட்டிற்குள் வாகனத்தை நிறுத்துவதற்காக இடங்கள் ஒதுக்கப்பட்டும் கோட்டிற்கு வெளியே நிறுத்திவிட்டுச் செல்வதும், இதனால் ஏற்படும் விளைவு இடையூறு, நெரிசல், விபத்து. வருத்தத்திற்குரிய விஷயம் என்னவென்றால் அரசுத்(காவல்துறை, அரசியல்துறை)துறை அதிகாரிகளும் விதிமுறைகளை கடைப்பிடிக்காமல் மீறிச் செல்கிறார்கள். தெய்வத்திருமகள் திரைப்படத்தின் கதாபாத்திரம்(விக்ரம்) மனவளர்ச்சி குன்றியவராக இருப்பார். ஆனால் அவருடைய செயல்கள் எல்லாம் மிகவும் புத்திசாலித் தனமாக இருக்கும். தரம் பிரித்தல், பொய் சொல்லாதிருத்தல், குறிப்பாக சாலையை கடப்பதற்காக (Signal)விளக்கை பார்த்துக்கொண்டே ஓரத்தில் நின்றுக்கொண்டு பச்சை(Pedestrian Signal) விளக்கு எரிந்தவுடன் அந்த எல்லைக்கோட்டின் வழியாக கடந்துச் செல்வார். இவர் (மனவளர்ச்சி குன்றியவர்)செய்கிற வேலைகளை சரியாக செய்கிறார் என்றால் சராசரி மனிதனின் செயல்கள் எப்படி இருக்க வேண்டும். சாலைகள் சந்திக்கும் இடங்களில் விளக்கிற்கு ஏற்றாற்போல் பொறுமையுடன் காத்திருந்து, ஆங்காங்கே இருக்கும் (சாலை விதிமுறைகளை)எல்லைக்கோடுகளை கவனித்துச் சென்றால் நம்முடைய பயணம் சிறப்பாக அமையும் மற்றும் இடையூறும், நெரிசலும், விபத்தும் ஏற்படாமல் தடுக்கலாம்.


"ஓட்டுனர்கள் விதிமுறைகளை பின்பற்றி கவனமுடன் சாலையில் செல்ல வேண்டும்."

No comments:

Post a Comment